×

அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி: வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமனம்

சென்னை: அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் கட்சி பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜவில் கலை, கலாசார பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பாஜவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலை, கலாச்சார பிரிவில் உள்ள நிர்வாகிகள் பலரை நீக்கினார். அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்தார். புதியவர்களை நியமிக்க நான் மாநில தலைமையிடம் கொடுத்த பட்டியல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இந்த பட்டியலை மாற்றுவதில் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. எங்கள் தலைவர் அண்ணாமலை என் முடிவில் நிற்பார் என்றும் அதிரடியாக அறிவித்தார். கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவும், சேர்க்கவும் மாநில தலைவர் அண்ணாமலையிடம் எந்த உத்தரவையும் காயத்ரி ரகுராம் வாங்கவில்லை. அது மட்டுமல்லாமல் கட்சியில் இருந்து நீக்கி, பலருக்கு புதிதாக பதவியும் கொடுத்து விட்டு என் முடிவுக்கு மாநில தலைவர் அண்ணமலை துணை நிற்பார் என்று மட்டும் தெரிவித்திருந்தார். கட்சியில் மாநில தலைவர் தான் அனைத்துக்கும் பொறுப்பு. அப்படியிருக்கும் மாநில தலைவரை விட வானளாவிய அதிகாரத்தை காயத்ரி ரகுராமுக்கு யார் கொடுத்தார்கள். இந்த விவகாரம் பெரிய அளவில் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மாநில தலைவரை விட, காயத்ரி ரகுராம் அதிகாரம் படைத்தவரா என்ற கேள்வியும் எழுந்தது.   இதுபோன்று அறிக்கை விடுத்த காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜவில் குரல் எழுந்தது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, தமிழக பாஜக பொது செயலாளராக இருந்த கரு.நாகராஜன், ‘கலை மற்றும் கலாச்சாரபிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது’’ என்று அறிவித்தார்.நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட அறிவிப்பை, அண்ணாமலை ரத்து செய்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகி வந்தது. இதையடுத்து கடந்த மாதம் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பாஜ தலைவருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், நடிகை காயத்ரி ரகுராம் கடும் வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக பாஜவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி: வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Gayatri Raghuram ,Annamalai ,BJP ,Tamil Development Wing of Foreign and Neighboring States ,Chennai ,BJP.… ,Tamil Development Division ,Dinakaran ,
× RELATED பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு...