கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நுபுர் சர்மாவிற்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்த ஹவுரா மாவட்டத்திற்கு சென்றபோது பாஜ மாநில தலைவர் சுகந்தா மஜும்தர் கைது செய்யப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய பாஜ முன்னாள் தகவல் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கண்டித்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இந்த மாவட்டத்திற்கு மாநில பாஜ தலைவரும் உத்தர் தினத்பூரில் உள்ள பலூர்காட் எம்பியுமான சுகந்தா மஜும்தார் நேற்று சென்றார். அப்போது, வித்யாசாகர் சேடு சுங்கசாவடி அருகே அவரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.