×

பிரபு, வெற்றி இணையும் ஆண்மகன்

சென்னை: ஆண்மகன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அப்பாவாக பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர், கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இளம் தயாரிப்பாளர் கேஎம். சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது.

மகாகந்தன் புதுமுக இயக்குனராக இதில் அறிமுகம் ஆகிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடுவது இப்படத்தின் தனிச்சிறப்பு. நவ்பல் ராஜா புதிய இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவு ஆலிவர் டெனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ளது.

The post பிரபு, வெற்றி இணையும் ஆண்மகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhu ,Chennai ,Anmagan ,Mansoor Ali Khan ,RV Udayakumar ,Iman Annachi ,Livingston ,Thangadurai ,Kollywood Images ,
× RELATED பறிமுதல் குட்கா பதுக்கி பேரம் 2 போலீஸ்காரர் சஸ்பெண்ட்