×

அரசு தோட்டக்கலை சார்பில் திறன் மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி: துணை இயக்குநர் தகவல்

செங்கல்பட்டு: தோட்டக்கலை துணை இயக்குநர் தே.சாந்தா செலின் மேரி வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணை சார்பில், ஆத்தூரில் நிலமில்லா விவசாய தொழிலாளர்களுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி  இம்மாதம் வழங்கப்பட உள்ளது. நிலமில்லா விவசாய தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் பூங்கொத்து , பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளர்ப்பு ஆகிய இனங்களில் 30 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு போக்குவரத்து கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ100 வீதம் வழங்கப்படும். பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற விரும்பும் விவசாய தொழிலாளர்கள் தோட்டக்கலை துறையின் இணையதளத்தில் (www.tnhorticulture.tn.gov.in) இடம் பெற்றுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அரசு தோட்டக்கலை பண்ணை ஆத்தூரில் அமைந்துள்ள மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் (தொடர்ப்பு எண்கள்: 94441-78928, 98416-32072, 70106-47832) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  என தெரிவிக்கப்படுகிறது….

The post அரசு தோட்டக்கலை சார்பில் திறன் மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி: துணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Te. Shanta Celine Mary ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...