×

வெ.இண்டீசுக்கு எதிரான 2வது ஒன்டே பாகிஸ்தான் அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

முல்தான்:பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 77 (93 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), இமாம் உல் ஹக் 72 (72 பந்து, 6 பவுண்டரி), சதாப் கான், குஷ்தில் ஷா தலா 22 ரன் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில், அகேல் ஹொசைன் 3, அல்சரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முன் சரண் அடைந்தனர். அந்த அணி 32.2 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 120 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. வெஸ்ட்இண்டீஸ் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஷமர் ப்ரூக்ஸ் 42, கைல் மேயர்ஸ் 33, கேப்டன்  பூரன் 25 ரன் அடித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது நவாஸ் 4, முகமது வாசிம் 3 விக்கெட் வீழ்த்தினர். முகமது நவாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-0 என பாகிஸ்தான் தொடரை கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டி நாளை நடக்கிறது….

The post வெ.இண்டீசுக்கு எதிரான 2வது ஒன்டே பாகிஸ்தான் அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : F.V. ,Pakistan ,Indies ,Multan ,WestIndies ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...