×

அவதூறு பரப்புபவர்களுக்கு எனது பெயர்தான் பிரச்னை: அமீர் பேச்சு

சென்னை: மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பிவிஆர்-ஐநாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் மே 10ம் தேதி வெளியிடுகிறது. அமீர் பேசும்போது, ‘குறிப்பிட்ட வழக்கில் என்னைப் பற்றி தவறான செய்திகளை யூடியூப் சேனலில் பரப்புகிறார்கள். இதனால் நான் மட்டுமல்ல, எனது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனது மகள்தான் எனக்கு இந்த விஷயத்தில் துணையாக இருந்தார்கள்.

அவதூறு பரப்புபவர்களுக்கு எனது பெயர்தான் பிரச்னையாக இருக்கிறது. ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற பெயரில் படம் இயக்கி வருகிறேன். இறைவன் என்பது பொதுச்சொல். ஆனால் அது அவர்களுக்கு வேறு மாதிரியாக தெரிகிறது. ‘ஓ… இறைவன் மிகப் பெரியவனா’ என்று யூடியூபில் அமர்ந்து கொண்டு ஏளனம் செய்கிறார்கள். இன்று அப்படி பேசியவர்கள் கைதாகி உள்ளே இருப்பதை பார்க்கும்போது இறைவன் மிகப் பெரியவன் என சொல்லத் தோணுகிறது’ என்றார். விழாவில் கரு.பழனியப்பன், சினேகன், எஸ்.ஆர்.பிரபாகரன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அவதூறு பரப்புபவர்களுக்கு எனது பெயர்தான் பிரச்னை: அமீர் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amir ,Chennai ,Aathambava ,Moon Pictures ,Aamir ,Chandini Sridharan ,Anandaraj ,Iman Annachi ,Marimuthu ,Rajkapur ,Subramaniasiva ,Mahanadi Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்