×

நேஷனல் ஹெரால்டு விவகாரம் அமலாக்கத் துறையை கண்டித்து காங். சத்தியாக்கிரக போராட்டம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி வரும் 13ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளது.   நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் திங்கட்கிழமை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று நடைபெற்றது. இதில், ‘நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் விசாரணை அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது. இதை கண்டித்து வரும் 13ம் தேதி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன்பு காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தபடும். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி.க்்களும், காரியக் கமிட்டி உறுப்பினர்களும் அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும்,’ என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன….

The post நேஷனல் ஹெரால்டு விவகாரம் அமலாக்கத் துறையை கண்டித்து காங். சத்தியாக்கிரக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : National Herald ,Department of Affair Enforcement ,Satyakraksha ,New Delhi ,Satyaksha ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ஏஜென்சிகளை...