×

ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணமா? அர்ஜூன் தாஸ்

சென்னை: வில்லன், கதாநாயகன் என்று பன்முகத்தன்மையுடன் நடித்து வரும் அர்ஜூன் தாஸ், அடுத்து ‘மௌனகுரு’, ‘மகாமுனி’ சாந்தகுமார் எழுதி இயக்கியுள்ள ‘ரசவாதி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி: திரையுலகில் என் காட்ஃபாதர் லோகேஷ் கனகராஜ். அவர் இல்லை என்றால் நான் இல்லை. நடிக்க வருவதற்கு முன்பு ஒரு வங்கியில் பணியாற்றினேன். பிறகு சில நடிகர்களுக்கு டப்பிங் பேசினேன். இப்போது யாருக்கும் டப்பிங் பேசுவதில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். வில்லன், ஹீரோ என்று பார்க்காமல், என் நடிப்புக்கு சவால் விடும் கேரக்டரில் நடிப்பேன். ‘ரசவாதி’ படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். கமல்ஹாசன் நடிப்பதை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன். எனவே, லோகேஷ் கனகராஜிடம் நானாக ஒரு வாய்ப்பு கேட்டு, ‘விக்ரம்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தவிர, படம் இயக்கும் எண்ணம் இல்லை.

கடந்த ஆண்டு ஒரு திரைப்படம் சம்பந்தமாக நானும், ஐஸ்வர்யா லட்சுமியும் சந்தித்தபோது ஒரு போட்டோ எடுத்து, எங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டோம். உடனே நாங்கள் காதலிப்பதாக வும், விரைவில் திருமணம் செய்யஇருக்கிறோம் என்பதாகவும் வதந்தி பரவியது. அவர் எனக்கு நெருங்கிய தோழி. மற்றபடி எங்களுக்கிடையே காதல் கிடையாது. திருமணத்தைப் பற்றி எனது பெற்றோர் எதுவும் பேசவில்லை. இப்போது என் திருமணத்துக்கு அப்படி என்ன அவசரம்?

 

The post ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணமா? அர்ஜூன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya ,Lakshmi ,Arjun Das ,CHENNAI ,Santakumar ,Lokesh Kanagaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்...