×

ஆவடி அருகே பைக் திருடிய 2 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல், ஹாஸ்பிட்டல் சாலையில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது அலி (22). தனியார் நிறுவன ஊழியர்.இவர் கடந்த 5ம் தேதி தனது பைக்கை, குடியிருப்பின் போர்டிகோவில் நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, தனது பைக் திருடுபோயிருப்பது முகமது அலிக்கு தெரியவந்தது.புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்குடியிருப்பின் சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் முகமது அலியின் பைக்கை திருடி செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் அதில் பதிவான உருவங்களை வைத்து, 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், சிசிடிவி காமிராவில் பதிவான உருவங்களை வைத்து, பூந்தமல்லி அருகே காடுவெட்டி பகுதியை சேர்ந்த பிளம்பர் தினேஷ்குமார் (19), வேலூர் மாவட்டம், காந்தி நகரை சேர்ந்த கோபி (22) ஆகிய இருவரையும் நேற்று மாலை அண்ணனூர் ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ஆவடி அருகே பைக் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Awadi ,Mohammad Ali ,Thirumullaivayal, Hospital Road ,Dinakaran ,
× RELATED பெண் தற்கொலை விவகாரத்தில் கடத்தப்பட்டவர் மீட்பு