×

பெண் தற்கொலை விவகாரத்தில் கடத்தப்பட்டவர் மீட்பு

சென்னை: கொட்டிவாக்கத்தில் இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் காரில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டார். நேற்றிரவு காரில் கடத்தப்பட்ட இளைஞர் முகமது அலி, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அருகே மீட்கப்பட்டார். இளைஞரை கடத்திய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சாமுண்டி, ஆறுமுகம், அருள், ரவிசங்கர், சண்முகம், சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலித்துவிட்டு முகமது அலி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண் தற்கொலையால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், ஆட்களை வைத்து முகமது அலியை கடத்தினர்.

The post பெண் தற்கொலை விவகாரத்தில் கடத்தப்பட்டவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kotivakam ,Mohammad Ali ,Olakure ,Villupuram district ,Chamundi ,Arumugam ,Arul ,Ravishankar ,Shanmugam ,Silambarasan ,Kallakurichi ,
× RELATED குளிர்பானத்தில் மயக்க மாத்திரை...