×

அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள்…மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேரிலாண்ட்டின் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள கொலம்பியா மிஷின்ஸ் என்ற எந்திர உதிரி பாகத் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை தடுக்க முற்பட்ட போது, அந்த மர்ம நபர் தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஆலை ஊழியர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த மேரிலாண்ட் மாகாண காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 3 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனிடையே தப்பி ஓடிய கொலையாளியின் வாகனத்தை அடையாளம் கண்டு பிடித்த மேரிலாண்ட் போலீசார் மவுண்ட் சாலையில் சுற்றி வளைத்தனர். அப்போது காவல்துறையினர் மீதும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசாரின் பதில் தாக்குதலில் படுகாயம் அடைந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட நபர் குறித்த விவரங்களை சேகரித்து வரும் காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் அதிகரித்து வரும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. …

The post அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள்…மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : united states ,Washington ,Maryland province, USA ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர்...