×

விஜய்யுடன் டான்ஸ் ஆட ஸ்ரீலீலா மறுப்பு

சென்னை: ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் டான்ஸ் ஆட ஸ்ரீலீலா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்பட பலர் நடிக்கும் படம் ‘கோட்’. வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் டான்ஸ் ஆட, ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இவர், ‘குண்டூர் காரம்’ படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்போது அஜித் ஜோடியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ‘கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஸ்ரீலீலா மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு சினிமாபோல் தமிழிலும் ஹீரோயினாக நடிக்கவே அவர் ஆசைப்படுகிறாராம். தமிழில் நடித்து, முன்னணி இடத்துக்கு வந்துவிட்டால், அதற்கு பிறகு பெரிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுவாராம். அதனால் இப்போதைக்கு அதுபோல் நடனம் ஆட விருப்பமில்லை என அவர் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

The post விஜய்யுடன் டான்ஸ் ஆட ஸ்ரீலீலா மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Srileela ,Vijay ,Chennai ,Prashant ,Prabhu Deva ,Mohan ,Meenakshi Choudhary ,Sineka ,Lord Venkat ,YUAN SANKAR RAJA ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்