×

மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் கவிதா. எஸ் தயாரிப்பில் சாக்லேட், கொலை விளையும் நிலம் ஆகிய படைப்புகளை உருவாக்கியதற்குப் பிறகு அடுத்த படைப்பாக மூத்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நடித்த ‘தாத்தா என்ற குறும்படம் உருவாக்கியுள்ளார். நரேஷ் இயக்கத்தில் வினோத் ஒளிப்பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். புதுமுக இயக்குநர் நரேஷ். இதற்கு முன் இயக்குநர் பாலாஜி தரணிதரன், சுதா கொங்கரா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல, மகன் தனது மகனை அப்பா, அம்மாவிடம் வீட்டுச் செல்கிறார். தாத்தா , பாட்டியிடம் இருக்கும் பேரன் அருகாமையில் இருக்கும் சிறுவன் விளையாடும் ரிமோட் காரைப் பார்த்து அதே போன்ற கார் வேண்டும் என தாத்தாவிடம் கோரிக்கை வைக்கிறான். சொற்ப சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் தாத்தாவுக்கு ரூ.800 ரூபாய் ரிமோட் கார் வாங்குவது மாபெரும் சவாலாக மாறுகிறது. தொடர்ந்து வேலை செய்யும் இடம், தெரிந்தவர்கள் என ரூ.800 கடன் கேட்கிறார். ஆனால் எங்கும் கிடைக்காமல் தனது சைக்கிளை விற்கிறார் அப்படியும் பணம் கிடைக்காமல் போகவே தொடர்ந்து தாத்தா எடுக்கும் முயற்சியும் ரிமோட் கார் வாங்கினாரா இல்லையா என்பதுதான் முடிவு.

16 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் முடிவு வரை உயிர்ப்புடன் எடுக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க பத்திரிகையாளர்கள் சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் யூடியூப் சேனல் ‘ஷார்ட்ஃபிளிக்‘ சேனலில் வெளியாகியிருக்கிறது. சொற்ப நிமிடங்களில் ஓடினாலும் நிச்சயம் இரண்டொரு நாட்கள் நம் மனதை பிழியும் தாத்தாவின் பாசத்தின் தாக்கத்தை நிச்சயம் எற்படுத்தும் இந்த ‘தாத்தா‘ குறும்படம்.

The post மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் ! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Janakaraj ,Impress ,Janagaraj ,Vinod ,Naresh ,A. R. Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட...