×

தாதா கேரக்டரில் சோனியா அகர்வால்

சென்னை: பெண் தாதாவாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ‘தண்டுபாளையம்’. வெங்கட் மூவீஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளார் டைகர் வெங்கட் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் ஆகியோருடன் டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- இளங்கோவன்.

இசை-ஜித்தின் ரோஷன். படம் குறித்து டைகர் வெங்கட் கூறும்போது, ‘1990களில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் நடக்கும் கதையாக உருவாக்கியுள்ளோம். கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒரு கூட்டத்தை பற்றிய கதையிது. இந்த கும்பல் இப்போதும் தென்னிந்தியாவில் உள்ளது. இந்த படத்தை கன்னடத்தில் உருவாக்கியபோது, எனக்கு மிரட்டல்கள் வந்தன. அதை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழில் உருவாக்கியுள்ளேன்’ என்றார்.

The post தாதா கேரக்டரில் சோனியா அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sonia Aggarwal ,Chennai ,Tiger Venkat ,Vanitha Vijayakumar ,Suma Ranganath ,Mumaid Khan ,Super Good Subramaniam ,Birla Bose ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹீரோவாக நடிப்பேன்: இசை அமைப்பாளர் தரண் குமார்