×

திருமங்கலத்தில் பைக் நிறுத்திய தகராறு: நடுரோட்டில் விரட்டி விரட்டி டாக்டரை தாக்கிய வாலிபர்

அண்ணாநகர்: திருமங்கலக்தில் நடுரோட்டில் விரட்டி சென்று டாக்டரை சரமாரியாக தாக்கிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் வசந்தம் காலனி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் தீபம் (61). காது, மூக்கு, தொண்டை டாக்டர். திருமங்கலம் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், கடந்த 27ம் தேதி மாலை, தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அதன் அருகில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் காரை எடுக்க வந்தபோது, முடியவில்லை. சிறிது நேரத்தில் பைக்கின் உரிமையாளரான வாலிபர் வந்தார். அவரிடம், ‘காரை எடுக்க முடியாத அளவுக்கு இப்படி பைக்கை நிறுத்தலாமா’? என்று கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பைக்கின் உரிமையாளர், தீபத்தை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளார். இதனால் நடுரோட்டில் ஓட ஆரம்பித்தார். அதற்கு பிறகும் விரட்டி சென்று தாக்கியுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், டாக்டரை மீட்டு வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.இதுகுறித்து திருமங்கலம் போலீசில் தீபம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த பதிவை வைத்து விசாரித்தபோது, தீபத்தை தாக்கியது, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (28) என தெரிந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வீட்டில் இருந்த கண்ணனை கைது செய்தனர். பின்னர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்….

The post திருமங்கலத்தில் பைக் நிறுத்திய தகராறு: நடுரோட்டில் விரட்டி விரட்டி டாக்டரை தாக்கிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Nadurote ,Annagar ,Thirumangalakth ,Nadurot ,Chennai Thirumangalam ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து