×

நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 340 நாள் சிறை

பெரம்பூர்: பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனி 31வது தெரு பகுதியை சேர்ந்தவர் மொபசீர் அகமது(30). இவர் மீது வில்லிவாக்கம் பகுதியில் 2020ம் ஆண்டு ஷாஜகான் என்பவரை கொலை செய்த வழக்கு மற்றும் பெரவள்ளூர், திருவிக நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நேரில் ஆஜராகி இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என நன்னடத்தை பிணை பத்திரத்தை எழுதிக்கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் கடந்த மே மாதம் 17ம் தேதி பெரவள்ளூர் போலீசார் இவரை ஜி.கே.எம்.காலனி பகுதியில் வைத்து ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். எனவே, துணை கமிஷனர் முன்னிலையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு  பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று மொபசீர் அகமது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவர் சிறையிலிருந்த 25 நாட்களை கழித்து மீதி 340 நாட்கள் அவரை சிறையில் அடைக்க துணை கமிஷனர் ஈஸ்வரன் நேற்று உத்தரவிட்டார்….

The post நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 340 நாள் சிறை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mobasir Ahmed ,31st street ,Peravallur GKM Colony ,Villivakkam ,Dinakaran ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி