×

குறையும் கொரோனா..அதிகரிக்கும் குரங்கு அம்மை!: உலகம் முழுவதும் 29 நாடுகளில் பாதிப்பு..WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் தகவல்..!!

ஜெனிவா: உலகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், குரங்கு அம்மை பாதிப்பு கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் முழுவதுமாக விடுபடாத வேளையில் ஆப்பிரிக்காவில் தோன்றிய குரங்கு அம்மை என்ற குரங்கு அம்மை நோய் தற்போது உலகின் 29 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். குரங்கு, அம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது, பெரும்பாலும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூர பகுதிகளில் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அந்த பகுதிகளில் 1,200க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post குறையும் கொரோனா..அதிகரிக்கும் குரங்கு அம்மை!: உலகம் முழுவதும் 29 நாடுகளில் பாதிப்பு..WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : WHO ,President ,Tedros Adhanam ,Geneva ,World Health Organization ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள்...