×

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கியது பெருமைக்குரியது: கே.எஸ்.அழகிரி பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:தேவசகாயம், 1752ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரல்வாய்மொழி அருகில் காத்தாடிமலைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மக்கள் நலன்சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த அவர், அனைத்து சமுதாய மக்களாலும், மனித புனிதராக கருதப்பட்டு, போற்றப்பட்டார். இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாகத்தான் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸால் வழங்கப்பட்டது. தமது சமுதாயப் பணி மற்றும் இறைப் பணி மூலமாக தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தேவசகாயம் பிள்ளைக்கு நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்தது. இத்தகைய பெருமைமிக்க இறைப்பணியாளரான தேவசகாயம் பிள்ளையை தமிழகம் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து வருகிறது. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திட தமிழ்நாடு காங்கிரஸ் மனதார வாழ்த்துகிறது, போற்றுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கியது பெருமைக்குரியது: கே.எஸ்.அழகிரி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : K. S.S. Anekiri ,Chennai ,Tamil Nadu Congress Committee ,K.K. S.S. ,Analakiri ,Tessaragayam ,Kathadimalai ,Aralvaylanga ,
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...