மலையாளத்தில் வெளியான கேங்ஸ்டர் கதை கொண்ட ‘ஆவேஷம்’ என்ற படத்தில், ரங்கா என்ற காமெடியுடன் கூடிய தாதா வேடத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த சமந்தா கூறுகையில், ‘இப்படத்தைப் பார்த்துவிட்டு, இதன் ஹேங்ஓவரில் இருந்து இன்னும் நான் வெளியே வரவில்லை. இப்படம் நான் மிகவும் விரும்பக்கூடிய எல்லாவிதமான பைத்தியக்காரத்தனத்தையும் கொண்டிருக்கிறது. வழக்கமான விதிகளை எல்லாம் உடைத்தெறியும் விதமாக படம் உருவாகி இருக்கிறது. காட்சிக்கு காட்சி மாறும் ஜானர்களைப் பார்த்து பயந்து சிரித்து, பிறகு மீண்டும் பயந்து சிரித்து, இப்படத்தைப் பார்த்தேன். சில படங்கள் தியேட்டரில் மட்டுமே பார்த்து ரசிக்கப்பட வேண்டியவை. அப்படிப்பட்ட ஒரு படம் இது. ஒருபோதும் பஹத் பாசில் படத்தை மிஸ் பண்ணிவிடாதீர்கள். இந்தக் கேரக்டருக்கு பஹத் பாசில் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். இந்தப் படக்குழுவினர் முழுமையான உத்வேகம் தருபவர்கள்’ என்று, பஹத் பாசிலுக்கு ஐஸ் வைத்திருக்கிறார். ஏற்கனவே அவர்கள் இருவரும் தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
The post பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.