உப்புருண்டை

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
தேங்காய் - சிறிதளவு (சிறு பற்களாக
நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, உளுந்து தாளிக்க
எண்ணெய் சிறிதளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை

அரிசியை , பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவிடவும். பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து முன்னம் அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும். பிறகு அதில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். கலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறவும். சிறிது நேரம் சென்றபின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஓரளவு ஆறிய பிறகு அந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து (கொழுக்கட்டை வேகவைப்பது போல்) வேகவைத்து எடுக்கவும். சுவையான உப்புருண்டை தயார்.

Tags :
× RELATED பிரிந்த தம்பதி இணைய அருள் தரும் கைலாசநாதர்