×

ஊர், பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு: எதிர்த்த மனு தள்ளுபடி

மதுரை: ஊர், பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றம் செய்வது அரசின் கொள்கை முடிவு என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பொன்னம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘துவரங்குறிச்சி – பொன்னம்பட்டி பேரூராட்சியில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பெயரை மாற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பெயர் மாற்றம் செய்தால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரே தொடர வேண்டுமென்றும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘ஊர் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. மெட்ராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றம் செய்ததை ஏற்றுக் கொண்டதைப் போலத்தான், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்….

The post ஊர், பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு: எதிர்த்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,iCourt ,Ur ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் இறுதி பணிநியமன...