×

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி இங்கி. பிரதமர் பதவி தப்பியது

லண்டன்:  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவரது பதவி தப்பியது.இங்கிலாந்தில் கடந்த 2019ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். இவர் கொரோனா முதல் அலையின்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நூற்றுக்கணக்கானோரை அழைத்து விருந்து வைத்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ‘பார்ட்டி கேட்’ என இந்த குற்றச்சாட்டுக்கு பெயர் வைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது கட்சியை சேர்ந்தவர்களே அவர் பதவி விலக  வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனைதொடர்ந்து, பிரதமர் போரிஸ் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று முன்தினம் மாலை நடத்தப்பட்டது. இதில் 211 பேர் அவருக்கு ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வென்றதால் அவரது பதவி தப்பியது. ஆனாலும், போரிசுக்கு ஆதவராக 58.8 சதவீதமும் எதிராக 41.2 சதவீத வாக்கும் பதிவாகி இருக்கின்றது. குறைந்த சதவீதத்தில் ஆதரவு இருப்பது அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி இங்கி. பிரதமர் பதவி தப்பியது appeared first on Dinakaran.

Tags : Ingi ,London ,Boris Johnson ,UK Parliament ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை