×

மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு : மாசாணியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநில பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோயிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் நேற்று பகல் 11.30 முதல் மகாளய அமாவாசை என்பதால், மாசாணியம்மன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் காலை முதலே வெகுநேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக பட்டுப்புடவைகளை சாத்தியும், தங்கமலர் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

இன்று காலை 9.50வரை மகாளய அமாவாசை நீடிப்பதால், பக்தர்கள் வசதிக்காக விடிய விடிய இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சியிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மகாளய அம்மாவாசையையொட்டி அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் பலரும், முன்னோர்கள் நினைவாக திதி கொடுத்தனர். அதுபோல், மகாளய அமாவாசையை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில், கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோயில்,கோட்டூர்ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன் கோயில், நல்லூர் மாகாளியம்மன்கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று மாலையில், மகாளய அமாவாசையையெட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

Tags : devotees ,Masaniamman ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...