×

கன்னடத்தில் அறிமுகம் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

பெங்களூரு: கேஆர்ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார். சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ படத்தில்தான் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக துர்கி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘உத்தரகாண்டா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் ‘உத்தரகாண்டா’ திரைப்படத்தில் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு. கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப் கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.

The post கன்னடத்தில் அறிமுகம் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Rajesh ,Kannada ,Bengaluru ,KRG Studios ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘டிஎன்ஏ’ படத்தில் இணைந்த 5 இசை அமைப்பாளர்கள்