×

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு

ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சொல்லி அடித்த கில்லியாக சிறப்பாக விளையாடி வருகிறது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் நான்காவது முறையாக 200க்கு அதிகமான ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250ஐ தாண்டிய ஸ்கோரையும் எடுத்து ஐதராபாத் அணி அதகளம் செய்து வருகிறது.

குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஐதராபாத் அணி மட்டுமே எடுத்து அசத்தியது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் சன் ரைசரஸ் ஐதராபாத் அணி விளையாடும் போட்டிகளை அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்களை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சந்தித்துள்ளார். கேப்டன் கம்மின்ஸ் மற்றும் வீரர்கள் மயானக் அகர்வால், ராகுல் திரிபாதி உள்பட சன் ரைசர்ஸ் டீமை அவர் சந்தித்தார்.

அவர்களுடன் போட்டோக்களையும் எடுத்துக் கொண்டார். இதேபோல் மகேஷ் பாபுவின் மனைவியும் நடிகையுமான நம்ரதா ஷிரோட்கரும் கம்மின்ஸ் அன்ட் டீமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது பற்றி மகேஷ் பாபு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘கம்மின்ஸை சந்தித்தது பெருமையாக இருந்தது. அணி வீரர்களுடனான சந்திப்பால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆல் தி பெஸ்ட் சன்ரைசர்ஸ்’ என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

The post சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mahesh Babu ,Sunrisers ,Hyderabad ,IPL ,Sunrisers Hyderabad ,Pat Cummins ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆண்டு வருமானத்தில் 30 சதவீதம் தொண்டு: மகேஷ் பாபு தாராளம்