×

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை..!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது. பிரபல நிறுவனம் என்பதால் சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் என தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கிளைகள் உள்ளது. அனைத்து வகையான பரிசோதனைகளும் ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் எடுக்கப்படுகிறது. இதனால் எப்போதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்கேன் சென்டர்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். இதனால் பல கோடி ரூபாய் இந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து ஆர்த்தி நிறுவனம் தனது ஸ்கேன் சென்டர்களுக்கு பல கோடி மதிப்புள்ள அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்துள்ளது. இந்நிலையில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் நிறுவனம் முறையாக கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் சென்னை வடபழனியில் உள்ள தலைமை அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் ஆர்த்தி நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம், வங்கி கணக்குகள் குறித்து உரிமையாளர்கள் மற்றும் ஆர்த்தி ஸ்கேன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. …

The post ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை..! appeared first on Dinakaran.

Tags : Arthi Scan Institution ,Chennai ,Arthi Scan Institute ,Tamil Nadu ,Arti ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...