×

மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை

சென்னை: அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வழங்குகிறார். எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபாஷங்கர், ரஞ்சனி, குரு சூரியா உள்பட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார். படம் பற்றி மணிவர்மன் பேசியதாவது: ஒரு நொடி என்பதை சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், அந்த ஒரு நொடியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த படத்தில் அப்படி ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன என்பது கதை. கிரைம் கதை என்றாலும் ஒரு கிரைம் படத்துக்குள் வழக்கமாக இருக்கும் காட்சிகள் இதில் இருக்காது. திரைக்கதை வித்தியாசமாக இருக்கும்.

தமன்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் ஹீரோயின் கிடையாது. இரண்டு மணி நேரம் ஓடும் படத்தின் கிளைமாக்ஸ் ஆச்சரியப்படும்படி இருக்கும். இவ்வாறு மணிவர்மன் கூறினார். நடிகர் ஆரி பேசும்போது, ‘மலையாள படங்கள் நன்றாக ஓடுவதாக சொல்கிறார்கள். அதற்கு போட்டியாக இப்படம் அமையும். காரணம், அந்த அளவுக்கு விறுவிறுப்பு நிறைந்த படமாக ஒரு நொடி அமைந்துள்ளது. இந்த படத்தின் 100 டிக்கெட்டுகளை நான் வாங்குகிறேன்’ என்றார். தொடர்ந்து படத்தின் இசை, டிரெய்லர் வெளியிடப்பட்டது. பழ.கருப்பையா, நடிகர்கள் தமன்குமார், வேல.ராமமூர்த்தி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், அழகர், கே.ஜி.ரத்தீஷ், நடிகைகள் தீபா சங்கர், ரஞ்சனி, இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

The post மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mallwood ,Ari Hope ,CHENNAI ,Manivarman ,Thamankumar ,Madurai Alaghar Movies ,White Lamp Pictures ,Dhananjeyan ,M.S. Bhaskar ,Vela Ramamurthy ,Pasha ,Karupaiah ,Deepashankar ,Ranjani ,Malluwood ,Aari Hope ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...