×

சின்னமனூர் அருகே சாலையோரம் மரம் வெட்டும் பணி தடுத்து நிறுத்தம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பேரூராட்சியிலிருந்து எல்லப்பட்டி பிரிவு, அம்மாபட்டி வழியாக உத்தமபாளையம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 50 ஆண்டுக்கு மேலான புளியமரங்கள் உள்ளது. அடர்ந்து வளர்ந்துள்ள புளியமரங்களால் எப்போதும் இந்த சாலை குளிர்ச்சியாக, நிழல் தந்து கொண்டே இருக்கும். இதனால் தேனி, உத்தமபாளையம், கம்பம் போன்ற ஊர்களுக்கு செல்பவர்களும் இந்த நிழல் சாலையில் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திடீரென இந்த சாலையில் உள்ள புளிய மரங்களை வெட்டிச் சாய்த்து விட்டனர் . சுமார் 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்து யார் என்ற கேள்வி கேட்டு மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

The post சின்னமனூர் அருகே சாலையோரம் மரம் வெட்டும் பணி தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Markayan Fort ,Ellapatti Division ,Uttampalayam ,Ammapatti ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்