×

செல்லூர் ராஜுவை மிரட்டும் பாஜ வக்கீல் அணி நிர்வாகி: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்த படியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. ஆனால், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும் பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது ஒன்றிய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியிருந்தார்.இந்நிலையில் பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்று பாஜ துணைத்தலைவர் வி.பி.துரைசாமி அதிமுகவை விமர்சித்ததை கூறி செல்லூர் ராஜு கூறினார். மேலும் அவர்  ஒன்றிய அரசில் பதவி பெறுவதற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டில் அதிமுகதான் எதிர்க்கட்சி யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அதிமுக தயார். மற்ற கட்சியினர் தயாரா. நாங்கள் காக்கா கூட்டம் இல்லை கொள்கை கூட்டம். இரைகளை போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரைகள் முடிந்து விட்டல் பறந்து விடும் என கூறினார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது அதிமுக, பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செல்போனில் பாஜ நிர்வாகி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, அதில்: ஹலோ என்கிறார் அதற்கு யாரு என்று கேட்கிறார். அதற்கு அவர் செல்லூர் ராஜூ அண்ணனா என்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்றவுடன், அண்ணே வணக்கம் சுரேஷ்குமார் பேசுகிறேன். அண்ணனுடைய பேட்டி பார்த்தேன், அதில் அவங்க தூணை போட்டால், நாங்கள் துரும்பா போட்டிருவோம் என்று கூறியிருந்தீர்கள். உண்மையில் அது பெரிய இதுனே.. நல்லா இருந்ததுனே என்று கூறிவிட்டு அண்ணே ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில்ல திருநீர் ஏதோ விற்றுக் கொண்டு இருந்தீர்களோ என்று கூறினார். திருநீர் கடை இல்லை பிரசாத கடை கொஞ்ச நாள் என்று கூறுகிறார். அதன்பிறகு அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி சரியாண்ணே, நீங்க ஒரு 3ம் வகுப்பு படித்த ஒரு ஆள், நீங்க என்னவெல்லாம் சாதனை பண்ணீங்க.. என்னெல்லாம் செய்தீங்க என்பது எல்லாம் தெரியும். தெர்மகோல் விட்டு தமிழகத்தை அலற விட்டீங்க, நீங்கள் அவ்வளவு பெரிய விஞ்ஞானி சரியாண்ணே என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது….

The post செல்லூர் ராஜுவை மிரட்டும் பாஜ வக்கீல் அணி நிர்வாகி: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ appeared first on Dinakaran.

Tags : BJP ,Sellur Raju ,CHENNAI ,AIADMK ,Tamil Nadu ,BJP Vakiel ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு