×

பாவூர்சத்திரத்தில் சிலம்ப போட்டி

பாவூர்சத்திரம் :  உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் உள்ள செயின்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான முதலாவது சிலம்ப போட்டி நடந்தது. இதில் மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.  போட்டிகளுக்கு சிலம்பம் விளையாட்டு சங்க  நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் சத்தியபீமன் வரவேற்றார். போட்டிகளை தெட்ஷண மாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் தொழிலதிபருமான ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்து முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் சுரண்டை நகராட்சித்தலைவர் எஸ்.பி. வள்ளி முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  தனித்திறன் போட்டியில் சுரண்டையை சேர்ந்த முருகேசன் முதல் பரிசும், ஆலங்குளம் புவனிகா இரண்டாவது பரிசும், கவுதமி மூன்றாவது பரிசும் பெற்றனர். தொடுதிறன் போட்டியில் சிவதீபக் முதலிடமும், பாலராமகிருஷ்ணன் இரண்டாம் இடமும், அருள் ரீகன் மூன்றாமிடமும் பெற்றனர். இரட்டைக்கம்பு பிரிவில் ருத்திரன் முதலிடமும் தமிழமுதன் இரண்டாம் இடமும் பவித்திரன் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றிபெற்ற அனைவரையும் உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள், பெற்றோர்கள் பாராட்டினர். கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்….

The post பாவூர்சத்திரத்தில் சிலம்ப போட்டி appeared first on Dinakaran.

Tags : Bhavoorchatra ,Bhavoorchatram ,World Cilambam Sports Association ,St. ,Assisi Matriculation High ,School ,
× RELATED பாவூர்சத்திரத்தில் நடுவழியில்...