×

அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்

ஐதராபாத்: அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா படம், ‘நாகபந்தம்’. கதை, திரைக்கதை எழுதி அபிஷேக் நாமா இயக்குகிறார். ‘கூடாச்சாரி’, ‘டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ போன்ற படங்களை தயாரித்தவரும், விநியோகம் செய்தவருமான அபிஷேக் நாமா, அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் 9வது படமான இதை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் இணைந்து தயாரிக்கிறார்.

‘டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற படத்தை இயக்கிய அபிஷேக் நாமா, தற்போது ‘நாகபந்தம்’ படத்தின் மூலமாக ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்த வருகிறார். இதற்காக ஆன்மீகம் மற்றும் அதிரடி சாகசங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். தேவன்ஷ் நாமா வழங்கும் இப்படத்தை தேவ் பாபு காந்தி (புஜ்ஜி) இணைந்து தயாரிக்கிறார்.

நேற்று யுகாதியையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில், இப்படத்துக்கு ‘நாகபந்தம் – தி சீக்ரெட் ட்ரெஷர்’ என்று பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் இப்படத்தில், மர்மங்கள் நிறைந்த அகோரி கேரக்டரில் ‘கேஜிஎஃப்’ அவினாஷ் நடிக்கிறார். மாயாஜால மர்மங்கள், சாகசங்கள் நிறைந்த தனி உலகத்துக்கு படம் அழைத்துச் செல்லும். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அபே இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, திரைக்கதையில் ராஜீவ் என்.கிருஷ்ணா உதவுகிறார். 2025ல் படம் திரைக்கு வருகிறது.

The post அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Abhishek Nama ,Hyderabad ,India ,Abhishek Pictures ,Thunder Studios ,Abhishek ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...