×

ஓடிடியில் வெளியாகிறது பிரேமலு

சென்னை: தென்னிந்தியா முழுக்க மிகப்பெரிய ஹிட்டான படம், ‘பிரேமலு’. இதை கிரிஷ் ஏ.டி இயக்கினார். நஸ்லென், மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன், ஷ்யாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாப் சலீம், ஷமீர் கான், கே.எஸ்.பிரசாத், மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஷ்கரன் நடித்தனர். கிரீஷ் ஏ.டி., கிரண் ஜோஷி இணைந்து எழுதினர்.

அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசை அமைத்தார். இதை பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் பஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ் கரன் தயாரித்தனர். இப்படம் வரும் 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழி களில் வெளியாகிறது.

 

The post ஓடிடியில் வெளியாகிறது பிரேமலு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : OTD ,South India ,Krish AT. Naslen ,Mamita Baiju ,Sangeet Pratap ,Akila Bargavan ,Shyam Mohan ,Meenakshi Ravindran ,Altab Salim ,Shameer Khan ,KS Prasad ,Mathew Thomas ,Shyam… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தியேட்டரை விட்டுவிட்டு ஓடிடிக்கு...