×

உடல்நிலை தேறிய நபா நடேஷ் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்

ஐதராபாத்: தெலுங்கில் வெளியான ’கார்த்திகேயா 2’ என்ற படத்தின் மூலம் பிரபலமான நிகில் நடித்து வரும் புதிய பான் இந்தியா படம், ’சுயம்பு’. இதில் சீனியர் வீரராக நடிக்கும் நிகில், தனது கேரக்டருக்காக ஆயுதம், தற்காப்புக்கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி பெற்றார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், நிகில் நடிக்கும் 20வது படமாகும். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன், ஸ்ரீகர் தயாரிக்கின்றனர்.

ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் சம்யுக்தா மேனன், தனது கேரக்டருக்காக பல்வேறு பயிற்சிகள் பெற்றார். இன்னொரு ஹீரோயினாக நடித்து வந்த நபா நடேஷ், திடீர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது உடல்நிலை தேறி மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நபா நடேஷ் குணமடைந்து படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ’கேஜிஎஃப்’, ’சலார்’ ஆகிய படங்களை தொடர்ந்து ரவி பஸ்ரூர் இசை அமைக்க, வாசுதேவ் முனேப்பகரி வசனம் எழுதுகிறார்.

The post உடல்நிலை தேறிய நபா நடேஷ் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Napa Nadesh ,Pan India ,Nikhil ,Kollywood Images ,
× RELATED யாக்ஷினி வேடம் சவாலாக இருந்தது: வேதிகா