×

நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு நேற்று கொலை மிரட்டல் வந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளார். சல்மான் கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் பாந்திரா பேண்ட் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம் கான் வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தபோது அவர் வழக்கமாக அமரும் இடத்தில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அந்த கடிதத்தை பிரித்து படித்தபோது கடிதத்தில் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதை அடுத்து நேற்று சல்மான் கான் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பாந்திரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படடையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது….

The post நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Mumbai ,Bollywood ,Salim Khan ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...