×

ஆதம்பாக்கம் ஏரிக்கரைக்கு பட்டா அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஏரிக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் எச்சரித்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் ஏரி மற்றும் ஏரிக்கரையினை ₹8.25  கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சிறு,  குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் என்.சந்திரன், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தனி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், மின்வாரிய கோட்ட பொறியாளர் கணபதி, மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது; ஆதம்பாக்கம் ஏரி மற்றும் ஏரிக்கரையினை மேம்படுத்தி பறவைகள் சரணாலயத்துடன் அழகுப்படுத்த கடந்த ஆண்டு சூழல் மற்றும் நகர்ப்புற மேம்பாடு  திட்டத்தின் கீழ் ₹8.25  நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை செய்ய முடியாதபடி வர்த்தக நிறுவனம் உள்பட 118 ஆக்கிரமிப்பாளர்களுக்கு   நான் பலமுறை எச்சரித்தும் அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர். அந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மேம்பாட்டு பணிகளை வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் விரைவில் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். …

The post ஆதம்பாக்கம் ஏரிக்கரைக்கு பட்டா அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amambakam ,Minister ,T. Mo Andarasan ,alandur ,Andarasan ,Lake Adambakam ,Chennai Anambakam ,Manambakkam Climb ,N. Mo Anbarasan ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி