×
Saravana Stores

பைனலில் கேஸ்பர் சவால் 14வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்?

பிரெஞ்ச் ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நார்வே வீரர் கேஸ்பர் ரூ.ட் சவாலை இன்று எதிர்கொள்ளும் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், இந்த தொடரில் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கத்தை தொடர்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால், இங்கு 13 முறை கோப்பையை முத்தமிட்டு ஈடு இணையற்ற சாதனை வீரராக முத்திரை பதித்துள்ளார். நடப்பு தொடரின் பைனலில் அவர் இன்று கேஸ்பருடன் மோதுகிறார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை வசப்படுத்துவதில், டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளாக விளங்கும் பெடரர் (20 பட்டம்), நடால் (21 பட்டம்), ஜோகோவிச் (20 பட்டம்) இடையேயான போட்டி இன்னும் தொய்வின்றி தொடர்ந்து வரும் நிலையில், நடால் தனது 22வது பட்டத்தை கைப்பற்றி முன்னிலையை அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நடாலின் (36வயது, 5வது ரேங்க்) அனுபவ ஆட்டத்துக்கு முன்பாக, இளம் வீரர் கேஸ்பரின் (23வயது, 8வது ரேங்க்) வியூகங்கள் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காயம் காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த நடால், மீண்டும் களமிறங்கி சாதிக்க முடியுமா என கேள்விகள் எழுந்த நிலையில்… தான் அசைக்க முடியாத ‘கிங் ஆப் கிளே’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூ.பித்து பைனலுக்கும் முன்னேறி உள்ளார்.அதிலும், காலிறுதியில் பரம எதிரியும், உலகின் நம்பர் 1 வீரருமான ஜோகோவிச்சை வீழ்த்தியது நடாலின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. 4 மணி நேரத்துக்கும் மேலாக களத்தில் தாக்குப்பிடித்து போராடும் அளவுக்கு உடல்தகுதியை மேம்படுத்தி இருப்பதும், அவரது தற்போதைய வெற்றி நடைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதே சமயம் எதிர்த்து விளையாடும் கேஸ்பரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் நேரடியாக முன்னணி வீரர்களை வீழ்த்தாவிட்டாலும், முன்னணி வீரர்களை வென்றவர்களை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்துள்ளார். அதுவும் முதல் முறையாக  கிராண்ட் ஸ்லாம் போட்டியின் பைனலுக்கு  முன்னேறிய சாதனையை படைத்துள்ளார். அவரது சவாலான ஆட்டத்தை நடால் சமாளிப்பாரா என்பதை பொறுத்தே நடப்பு பிரெஞ்ச் ஓபனில் புதிய சாம்பியனா? இல்லை… அதே பழைய சாம்பியனா! என்பது முடிவாகும். கேஸ்பர் 2015 முதல் தொழில்முறை டென்னிசில் பங்கேற்றாலும், இதுவரை நடாலுடன் மோதியதே இல்லை. அந்த வகையிலும் இந்த  ஆட்டம் கவனம் ஈர்த்துள்ளது….

The post பைனலில் கேஸ்பர் சவால் 14வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்? appeared first on Dinakaran.

Tags : Casper ,Wellwara Nadal ,Kasper ,Rs ,Spain ,Dinakaran ,
× RELATED ஜெனீவா ஓபன் டென்னிஸ் கேஸ்பர் சாம்பியன்