×

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பாதாள சாக்கடை தூர்வாரும் இயந்திரம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படம் கடந்த மாதம் 20ம் தேதி திரைக்கு வந்தது. இதில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன். ஷிவானி ராஜசேகர் நடித்திருந்தனர். இந்தியில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றது. இதையடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது. அருண்ராஜா காமராஜ், தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனா, இளவரசு, மயில்சாமி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாதாள சாக்கடை தூர்வாரும் இயந்திரத்துடன் கூடிய லாரியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் பாதாள சாக்கடை அள்ளும் பணியை மனிதர்கள் மேற்கொள்வதை உதயநிதி ஸ்டாலின் கண்டித்து நடித்திருந்தார். மேலும், அதற்கான இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதையொட்டியே இந்த லாரியை அவர் வழங்கியுள்ளார்….

The post தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பாதாள சாக்கடை தூர்வாரும் இயந்திரம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Tamil Nadu Drinking Water Drainage Board ,Chennai ,Tanya ,Tamil Nadu Drinking Water ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...