- இவானா
- சென்னை
- ஜி.வி. பிரகாஷ் குமார்
- பாரதி ராஜா
- தீனா
- தில்லிபாபு
- திரைப்பட தொழிற்சாலையை அண
- ரேவா
- பி. வி சங்கர்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா நடித்திருக்கும் ‘கள்வன்’ படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, பின்னணி இசையை ரேவா அமைக்கிறார். பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். வரும் 4ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தைப் பற்றி பி.வி.சங்கர் கூறியதாவது:
மலைப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் வாழ்க்கை மற்றும் சில வனவிலங்குகள் ஊருக்கு வருவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சொல்லும் இப்படத்தில், திருட்டுகளில் ஈடுபவராக ஜி.வி.பிரகாஷ் குமார், அவரது தாத்தாவாக பாரதிராஜா, காதலியாக இவானா நடித்துள்ளனர். யாருக்கும் மேக்கப் இல்லை. ‘நாச்சியார்’ என்ற படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக இவானா நடிக்கிறார். யானை தொடர்பான காட்சிகள் அதிகமாக இருந்ததால், கேரளாவில் இருந்து 6 யானைகளை வரவழைத்து, உரிய அனுமதி பெற்று நடிக்க வைத்தோம்.
The post மேக்கப் இல்லாமல் நடித்த இவானா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.