×

மதம், அறிவியல் குறித்து தந்தை பெரியாரின் கருத்துக்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள ஆங்கில புத்தகம்: இணையவழி கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, ஆய்வாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் பங்கேற்பு

சென்னை: மதம் மற்றும் அறிவியல் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள ஆங்கில புத்தகத்தின் அறிமுக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சென்னை தரமணியில் திராவிடியன் புரொபொசினல் ஃபாரம் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் நடத்தப்பட்ட இணையவழி கூட்டத்தில் பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, ஆய்வாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இணையவழியில் பங்கேற்று பேசியவர்கள் பெரியாரின் அரசியல் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் பேட்டியளித்த நூலாசிரியர் கார்த்திக் ராம் மனோகரன் மதம் மற்றும் அரசியல் குறித்து பெரியார் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.பெரியாரின் கருத்துக்களை உலக நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டதாகவும் கார்த்திக் ராம் மனோகரன் தெரிவித்தார். காலத்திற்கு ஏற்ற வகையில் பெரியாரின் கருத்துக்கள் இருப்பதை ஆய்வாளர்கள் உணர்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார். …

The post மதம், அறிவியல் குறித்து தந்தை பெரியாரின் கருத்துக்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள ஆங்கில புத்தகம்: இணையவழி கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, ஆய்வாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Peryar ,Dhimuka M. B. Mineralogy ,A. S. ,panneirselvam ,Father Peryar ,A. S. Panneirselvam ,Dinakaraan ,
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை...