×

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளில் மேயர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட தனியார் பள்ளிகளில் மேயர் மகாலட்சுமி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.தமிழகம் முழுவதும் முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வானது நடைபெற்று முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டிற்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பள்ளிகள் அனுமதியுடனும், மாநகராட்சி வரி செலுத்தப்பட்டு முறையாக இயங்கி வருகிறதா என்றும், கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்டவை குறித்து கல்வி நிலைக்குழு தலைவர் இலக்கியா சுகுமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் நாராயணன், துணை மேயர் குமரகுருநாதன், 1வது மண்டலக்குழு தலைவர் சசிகலா, நகரமைப்பு குழு தலைவர் பூங்கொடி தசரதன், வரி விதிப்பு மற்று நிதி நிலைக்குழு தலைவர் விஷ்வநாதன், வார்டு உறுப்பினர்கள் குமரவேல், குட்டி என்கிற சண்முகநாதன், மவுலி, சரஸ்வதி, சூரியாவிஜிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்….

The post காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளில் மேயர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Mayor ,Makalakshmi ,Kanchipuram Corporation ,Tamil Nadu ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...