×

ஜெயம் ரவியின் ஜீனி செகண்ட்லுக் வெளியீடு

சென்னை: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் படம், ‘ஜீனி’. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் வித்தியாசமான செகண்ட்லுக் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜே.ஆர்.அர்ஜூனன், ‘ஜீனி’ படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

மற்றும் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படம் குறித்து ஜே.ஆர்.அர்ஜூனன் கூறுகையில், ‘இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் பற்றிய விவாதம் ஒரு வாரத்துக்கு மேல் நடக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்துவிடுவோம்.

ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையப்படுத்திய இப்படம், வலிமையான பெண் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ளது. தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளைச் சுற்றி படத்தின் கதை நகரும். 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. 3 பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்படுகின்றன’ என்றார்.

The post ஜெயம் ரவியின் ஜீனி செகண்ட்லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayam Ravi ,Chennai ,Isari K. Ganesh ,Wales Film International ,JR Arjunan ,Mishkin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...