×

ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘

எதிர்பார்க்கப்பட்ட மலையாள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரான ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை, ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தினை ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். தொடர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக, திருச்சூரில் உள்ள காவல்துறை உதவி ஆணையரான ஓஸ்லரின் முயற்சிகளைப் பற்றிய படம் தான் ஓஸ்லர்.

ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வைத்திருக்கும் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ஓஸ்லர் வாழ்வில் அவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சோகத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியாத நேரத்தில், காவல் துறை சந்தித்த மிகக் கடினமான வழக்குகளில் ஒன்றான, புத்திசாலித்தனமான, இரக்கமற்ற சீரியல் கில்லர்களை எதிர்கொள்கிறார் ஓஸ்லர். இன்சாமினியா எனும் தூக்கமின்மை மற்றும் ஹாலுசினேஷன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓஸ்லர், இந்த வழக்கினை அந்த கடினமான நேரத்தில் எப்படி பல சவால்களை தாண்டி, எப்படி முடிக்கிறார் என்பது தான் இந்தப்படம்.

இப்படத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்க, மம்முட்டி, அனஸ்வர ராஜன், அர்ஜுன் அசோகன், அனூப் மேனன், சைஜு குருப், ஜோசப் மேத்யூஸ், ஆர்யா சலீம், செந்தில் கிருஷ்ணா, ஜெகதீஷ் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், மிதுன் முகுந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

The post ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayaram ,Mammootty ,OTD ,Mithun Manuel Thomas ,Randhir Krishnan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மம்மூட்டி படத்தை தொடங்கினார் கவுதம் மேனன்