×

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி வரவேற்றார்.மாநில நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, இஏபி.சிவாஜி, சி.எச்.சேகர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மு.பகலவன், கேவிஜி.உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர் பரிமளம், ஏ.நிலவழகன், நிர்வாகிகள் அன்புவாணன், கோதண்டம், சுரேஷ், கதிரவன், சக்திவேல், மு.மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார், சுகுமாறன், செல்வசேகரன், சந்திரசேகர், ரவி, ரமேஷ்ராஜ், அப்துல் ரசித், வெங்கடேசன், அறிவழகன், இளங்கோவன், மோகன்ராஜ், ரவிக்குமார், ராமமூர்த்தி, அபிராமி குமரவேலு, கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ், தில்லை குமார், வெற்றி, தேவேந்திரன், சித்ரா முனுசாமி, ராமஜெயம், சங்கர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து கிராமங்களில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கவேண்டும். ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். ஆதரவற்ற மற்றும் அனாதை இல்லங்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். திமுகவின் ஓராண்டு சாதனை குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக்குழு தலைவர் ரவி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், நிர்வாகிகள் தனசேகர், அப்புனு, மொய்தீன், ராஜா, கோகிலா, விமல்ராஜ், சுமன், மீஞ்சூர் முரளி, ஆரம்பாக்கம் ஆறுமுகம், உதயகுமார், ராகவரெட்டிமேடு ரமேஷ் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்….

The post திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Eastern District Thiruvallur Executive Executive Meeting ,D.C. J.J. Govindarajan ,MLA ,Kummimdipundi ,Thiruvallur Eastern District Dishaghagam Executive Meeting ,Thiruvallur Eastern District Dizhagam Executive Executive Meeting District ,Thiruvallur Eastern District Dizhagam Executive Meeting ,D.C. ,J.J. Govindarajan ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்