×

ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி

டோக்கியோ: ஆர்ஆர்ஆர் படத்தின் சிறப்பு காட்சி ஜப்பானில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக இயக்குனர் ராஜமவுலி தனது மனைவியுடன் அங்கு சென்றிருந்தார். அப்போது 83 வயது ரசிகை ஒருவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து ராஜமவுலிக்கு சிறப்புப் பரிசு ஒன்றை அளித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இதை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள ராஜமவுலி, ‘ஆர்ஆர்ஆர் படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த 83 வயது ரசிகை, வண்ணத்தாள்களில் செய்யப்பட்ட ஆயிரம் ஓரிகாமி கொக்குகளை (origami cranes) பரிசளித்து எங்களை ஆசிர்வதித்தார். சில செயல்களுக்கு நம்மால் நன்றியை மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும்’ என தெரிவித்துள்ளார். ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து தங்களுக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாம். ஆகவேதான் இதுபோன்ற ஒரு பரிசை அந்த பாட்டி கொடுத்துள்ளார்.

The post ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamouli ,Tokyo ,RRR ,Japan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜப்பான் நாட்டை சேர்ந்தவரின் வினோத...