×

சீனாவில் பயங்கர பூகம்பம்: 4 பேர் பலி 15 பேர் காயம்

பீஜிங் : சீசீனாவில் உள்ள சிசுவான் மாகாணம், பூகம்ப ஆபத்து  அதிகமாக உள்ள பகுதி. கடந்த 2008ம் ஆண்டு இங்கு 7.9 ரிக்டேர் புள்ளியில்  தாக்கிய பயங்கர பூகம்பத்தில் சிக்கி 90 ஆயிரம் பேர் பலியாகினர். இந்நிலையில், நேற்று மாலை இந்த மாகாணத்தில்  யான் என்ற பகுதியில் உள்ள லுசான் மாவட்டத்தில்   ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பூகம்பம் தாக்கியது. பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் இருந்தது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. பல வீடுகள் இடிந்தன. சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள் தள்ளாடின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். இங்கு கட்டிடங்கள் இடிந்ததில் 4 பேர் பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். மீட்பு பணிகளில் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். …

The post சீனாவில் பயங்கர பூகம்பம்: 4 பேர் பலி 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Sichuan Province ,Dinakaran ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...