×
Saravana Stores

தயாரிப்பாளர் ஆனார் ராஜமவுலி மகன்

ஐதராபாத்: ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கும் 2 படங்களில் பஹத் பாசில் நடிக்கிறார். இதில் ‘ஆக்சிஜன்’ படத்தை சித்தார்த் நாதெல்லாவும் ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்ற ஃபேன்டஸி கதையை ஷஷாங்க் யெலேட்டியும் இயக்குகின்றனர். இதுபற்றி எஸ்.எஸ்.கார்த்திகேயா கூறும்போது, ‘பிரேமலு படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘ஆக்சிஜன்’, ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ படங்களைத் தயாரிக்கிறேன். 2 படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்றும் இரண்டிலும் ஒரே நடிகர் நடிப்பார் என்றும் நினைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

 

The post தயாரிப்பாளர் ஆனார் ராஜமவுலி மகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamouli ,Hyderabad ,SS Karthikeya ,Bahad Basil ,Siddharth Nadella ,Shashank Yeleti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை சமந்தா விவகாரம் – அமைச்சருக்கு எச்சரிக்கை