×

மாடியில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

சென்னை : சூளைமேடு வீரபாண்டி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(40), ஏசி மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் பணி முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். நள்ளிரவு காற்றுக்காக வீட்டின் 4வது மாடிக்கு போதையில் தள்ளாடியபடி ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். இதேபோல், ராயப்பேட்டையை சேர்ந்த பிரிண்டிங் மெஷின் மெக்கானிக் பாண்டியராஜன்(41), நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டின் முதல் மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்….

The post மாடியில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Suresh ,3rd Street ,Killaimedu Veerabandi Nagar ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம்,...