×

வேட்பாளரை எச்சரித்த டொவினோ தாமஸ்

திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ், சார்லி, கப்பி, மாயாநதி, லூசிபர், மின்னல் முரளி உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்து உள்ளார். தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இந்தநிலையில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சுனில்குமார் நேற்று டொவினோ தாமசை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்தார். அதன் பிறகு அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சுனில்குமார் தனது முகநூலில் வெளியிட்டார்.

உடனே டொவினோ தாமஸ் முகநூலில் ஒரு குறிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பது: நான் கேரள தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதுவராக உள்ளேன். எனவே எனது புகைப்படத்தையோ, என்னுடன் இருக்கும் புகைப்படத்தையோ வேட்பாளர்கள் உள்பட யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து சுனில்குமார், டொவினோ தாமசுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் இருந்து நீக்கிவிட்டார்.

The post வேட்பாளரை எச்சரித்த டொவினோ தாமஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : DOVINO THOMAS ,Thiruvananthapuram ,Dovino ,Thomas ,Charlie ,Kappy ,Mayanathi ,Lucifer ,Murali ,Dhanushin ,Communist Party of India ,Tiruchur ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில்...