×

ரொமான்டிக் காமெடி கதையில் நித்யா மேனன்

சென்னை: தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன், ஜெயம் ரவி ஜோடியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பேன்டஸியுடன் கூடிய ரொமான்டிக் காமெடி கதையில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பான் இந்தியா படமாக உருவாகும் இதில், விநய் ராய், நவ்தீப், பிரதீக் பப்பர், மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் தீபக் பரம்போல் நடிக்கிறார்கள். விஷ்ணுவர்தனின் உதவி இயக்குனர் காமினி, எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு ப்ரீத்தா ஜெயராமன், கலை சண்முகராஜா. இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ், பாப்டர் மீடியா தயாரிக்கிறது.

 

The post ரொமான்டிக் காமெடி கதையில் நித்யா மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nithya Menon ,CHENNAI ,Dhanush ,Jayam Ravi ,Pan ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ஜாவா