×

விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜூ

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள ரசிகர்களிடமும் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நாளை இப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள மமிதா பைஜூ, தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘வணங்கான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

ஆனால், இப்படத்தின் ஷூட்டிங்கில் பாலா தன்னை அடித்ததாக சொல்லி சர்ச்சை ஏற்படுத்திய அவர், உடனே இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வரும் 22ம் தேதி திரைக்கு வரும் ‘ரெபல்’ என்ற படத்தின் மூலம் மமிதா பைஜூ தமிழில் அறிமுகமாகிறார். கேரளாவில் கோட்டயம் பகுதியில் பிறந்த அவர், தற்போது குடும்பத்தினருடன் கொச்சியில் வசித்து வருகிறார்.

சிறுவயதில் நடனம் கற்றுக்கொண்ட அவர், ஆரம்பத்தில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த அவருக்கு ‘பிரேமலு’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து அவர் விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் டைரக்டர் ராம்குமார் எழுதி இயக்குகிறார். இது, விஷ்ணு விஷால் நடிக்கும் 21வது படமாகும்.

The post விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜூ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mamita Baiju ,Vishnu Vishal ,Chennai ,Kerala ,Andhra Pradesh ,Tamil Nadu ,Red Giant Movies ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு